இன்று ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு பரீட்சை நிலையங்களுக்கு
விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக சிசுசெரிய பேருந்து சேவையை முன்னெடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
சிசுசெரிய சேவையில் ஈடுபடும் சகல பேருந்து பணியாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சை முடியும் வரையில், இந்த பேருந்து சேவையை தொடருமாறு தேசிய போக்குவரத்து
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், மிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும், அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் டெங்கு நோய்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Discussion about this post