இன்று உலக தொழுநோய் தினமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் தினமாக அறிவிக்கப்படுட்டுள்ளது.
உலகின் 120 நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் தொழு நோயாளர்கள் பதிவாகின்றனர்.
இலங்கையிலும் வருடாந்தம் இத்தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் தொழுநோய் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் எனவும் தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த வருடம் பதிவான தொழுநோயாளிகளின் எண்ணிக்கை முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் இடையே தொழுநோயைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
Discussion about this post