இன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
A முதல் L வரையான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
P முதல் W முதலான வலயங்களில், காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேரம் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post