எதிர்காலத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்வதை தடுப்பதற்கான
திட்டம் தயாராகியுள்ளது.
இதன்படி பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் அந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணனி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (28) கைச்சாத்திடப்பட்டது.
Discussion about this post