அதிபர் தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதிபர் தேர்தல் என்பது குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்ட தேர்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபரின் அதிகாரம்
இதேவேளை, தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பின் மூலம் சிறிலங்கா அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதிபர் தேர்தலை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post