இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (20) இலங்கை வரவுள்ளார்.
நாளை காலை வருகை தரவுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இருதரப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டவுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
அத்துடன், மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சரின் நாளைய விஜயத்தின் போது கலந்துரையாடப்படும் எனவும் அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
இதேவேளை, இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை மாலை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.
Discussion about this post