சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் 50 சதவீத பங்கீடு இந்தியா மற்றும் சீனா கையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “2023 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி அடையும் சந்தைகளை பார்க்கும் போது ஆசியா தான் மிகவும் பிரகாசமாக உள்ளது.
அதிலும் முக்கியமாக இந்தியா மற்றும் சீனா 2023 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.ஏனைய சந்தைகள் சரிவு பாதையில் உள்ளது.
கடந்த சில வருடமாக சர்வதேச பொருளாதாரம் கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் பாதித்து வருகிறது. இதில் முக்கியமாக 2022 ஆம் ஆண்டில் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக 6.1 சதவீதமாக இருந்த சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதியாக குறைந்து 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் வல்லரசு நாடுகள் மந்தமான பொருளாதார வளர்ச்சியை பாதிக்க உள்ளது.
வட்டி விகித உயர்வில் தொடங்கி பணவீக்கம், பணிநீக்கம், வேலைவாய்ப்பு, பிராந்திய வங்கிகளின் நிலையற்ற தன்மை எனப் பல பிரச்சினைகள் அடுக்கடுக்காக உள்ளது. இதேபோல், ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையும் ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் வல்லரசு நாடுகள் இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது” – என்றார்.
Discussion about this post