பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலரை கோரியுள்ளது என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே இந்தியா உறுதியளித்துள்ள ஒரு பில்லியன் டொலர் கடனுதவிக்கு மேலதிகமாக இந்த உதவி கோரப்பட்டுள்ளது என அவை தெரிவித்துள்ளன.
Discussion about this post