அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய கடனின் ஒரு பகுதியில் இரும்பு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து கடன் பெறப்பட்டிருந்தது.
இந்தக் கடன் தொகையில் ஒரு பில்லியன் டொலரில் இரும்பு கொள்வனவு செய்வதற்கு அமைச்சர்கள் குழுவொன்று நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று கூறப்படுகின்றது. இதற்குப் பல தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அரசாங்கத்துக்கு ஆதரவான பலர் உள்ளனர் என்று கூறப்படுகின்றது.
அதேவேளை, இந்தியாவால் வழங்கப்பட்ட கடனில் இதுவரை 250 மில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 750 மில்லியன் டொலர் மட்டுமே கையிருப்பில் உள்ளது.
Discussion about this post