Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

இந்தியப்படையினருக்கு சிக்கலை ஏற்படுத்திய ஆயுதக் களைவு

December 19, 2023
in ஆய்வு கட்டுரைகள், இலங்கை, முக்கியச் செய்திகள்
இந்தியப்படையினருக்கு சிக்கலை ஏற்படுத்திய ஆயுதக் களைவு
0
SHARES
Share on FacebookShare on Twitter

விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதென்பது எப்பொழுதுமே சிக்கலான ஒரு விடயம்தான்.

தற்பொழுது இந்தச் சமாதான முன்னெடுப்பு காலத்தில் புலிகளிடம் இருந்து ஆயுதங்களை களையவேண்டும் என்ற கோரிக்கைகளை ஜே.வி.பி.முதல், இந்தியாவின் முன்னாள் இராணுவ உயரதிகாரி சதீஷ் நம்பியார் வரை முன்வைத்து வரும் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிகாக்கும் படையினர் மேற்கொண்ட ஆயுதக் களைவு நடவடிக்கைகள் பற்றி பார்ப்பது பொருத்தமாகவே இருக்கின்றது.

அத்தோடு, புலிகள் மீது இந்திய அமைதிகாக்கும் படை மேற்கொண்ட ஆயுதக் களைவு நிர்ப்பந்தம் பற்றியும், அதனை புலிகள் எதிர்கொண்ட விதம் பற்றியும் சற்று விரிவாக ஆராய்வது இன்றைய அவசியமும் கூட. புலிகளுக்கு எதிரான இந்தியாவின் முதலாவது ஆயுதக் களைவு 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி சென்னையில் இடம் பெற்றது.

இந்தியப்படையினருக்கு சிக்கலை ஏற்படுத்திய ஆயுதக் களைவு | Ltte Disarmament Caused The Problem

தமிழ் நாட்டுப் காவல்துறையினர் புலிகளின் அலுவலகங்களைச் சுற்றிவளைத்து, புலிகள் வசமிருந்த ஆயுதங்களையும், தொலைத்தொடர்பு கருவிகளையும் கைப்பற்றியிருந்தார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மேற்கொண்ட சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீண்டும் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் புலிகளுக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்திருந்தது. புலிகளிடம் ஆயுதங்கள் இருப்பதை இந்தியா தொடர்ந்து அனுமதிக்காது என்பதுடன், அந்த ஆயுதங்களை களையும் நடவடிக்கையை இந்தியா எந்தச் சந்தர்பத்தில் வேண்டுமானாலும் மீண்டும் மேற்கொள்ளலாம் என்பதையும் புலிகளுக்கு அந்தச் சம்பவம் நன்றாக உணர்த்தியிருந்தது.

அதனால், தமது ஆயுதங்கள் விடயத்தில் புலிகள் மிகுந்த எச்சரிக்கையாகவே நடந்துகொள்ளத் தலைப்பட்டார்கள். அத்தோடு, இந்தியா என்றாவது ஒரு நாள் புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதற்கு முயற்சி செய்யும் என்பதை புலிகளின் தலைவர் தெளிவாகவே உணர்ந்திருந்தார்.

அதனால், இந்தியா புலிகளுக்கு ஆயுதங்களை வினியோகித்து வந்த காலத்திலேயே வேறு நாடுகளிடம் இருந்து புலிகள் இரகசியமாக பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்து வந்ததுடன், தம்மிடமுள்ள ஆயுதக் கையிருப்பு விடயத்தில் இந்தியாவை பலவழிகளிலும் ஏமாற்றியும் வந்திருந்தார்கள்.

றோவை ஏமாற்றிய புலிகள்.

80களின் ஆரம்பத்தில், புலிகள் உட்பட தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கும் பொறுப்பு ‘றோ அமைப்பினரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

றோவும் தம்மால் பயிற்றப்பட்ட போராளிகளின் விபரங்கள், போராட்ட அமைப்புக்களுக்கு தம்மால் வழங்கப்பட்ட ஆயுத தளபாடங்களின் பட்டியல்கள் என்பனவற்றை மிகவும் கவனமாகவே பேணி வந்தது.

இந்தியப்படையினருக்கு சிக்கலை ஏற்படுத்திய ஆயுதக் களைவு | Ltte Disarmament Caused The Problem

 

ஒவ்வொரு போராட்ட அமைப்பிடமும் எப்படியான ஆயுதங்கள் இருக்கின்றன, எத்தனை ஆயுதங்கள் இருக்கின்றன போன்ற விபரங்களை மாதாமாதம் கணக்கிட்டு கண்காணித்து வந்தது.

இயக்கங்களும், தாம் பாவித்த மற்றும் தம்மிடம் வைத்துள்ள ஆயுதங்களின் விபரங்களை ‘றோ அதிகாரிகளிடம் மாதாமாதம் தெரிவிக்கவேண்டும் என்றும் கேட்கப்பட்டிருந்தார்கள். சரியான சந்தர்ப்பத்தில் தமிழ் அமைப்புக்களிடம் இருந்து ஆயுதங்களை மீள பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனே றோ இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது.

விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களின் விபரங்களும், ‘றோ அதிகாரிகளால் மிகவும் கவனமாக திரட்டப்பட்டன. புலிகளும் தம்மிடமுள்ள ஆயுதங்கள் பற்றிய விபரங்களை அவ்வப்போது ‘றோ அதிகாரிகளிடம் வெளியிட்டே வந்தார்கள்.

இருந்த போதிலும், புலிகள் தம்மிடமுள்ள ஆயுதங்களின் கணக்குகளை வெளியிடும் விடயத்தில் றோ அதிகாரிகளை எவ்வாறு ஏமாற்றியிருந்தார்கள் என்ற விபரத்தை, India’s Sri Lankan Fiasco’ என்ற ஆய்வு நூல் விபரித்திருக்கின்றது.

 

இந்தியப்படையினருக்கு சிக்கலை ஏற்படுத்திய ஆயுதக் களைவு | Ltte Disarmament Caused The Problem

‘புலிகளிடம் உள்ள ஆயுத கையிருப்பு பற்றிய விபரங்கள் ‘றோவிடம் இருந்தன. ஆனால் சண்டைக்குச் சென்று திரும்பும் புலிகள், சண்டைகளின்போது பாவித்த ரவைகள் மற்றும் இழந்த ஆயுதங்கள் போன்றனவற்றின் கணக்குகளை அதிகமாகவே ‘றோவிடம் வெளியிட்டுவந்தார்கள்.

அதேவேளை, சண்டைகளின் போது எதிரியிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களின் உண்மையான விபரங்களை அவர்கள் வெளியிடுவதில்லை. இதனால், புலிகளிடம் உள்ள ஆயுதங்கள் தொடர்பான கணிப்பீடுகளில் ‘றோ அதிகாரிகளுக்கு பலத்த தடுமாற்றம் இருந்துவந்தது.

டெலோ அமைப்பின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களின் போதும், பெருமளவு ஆயுதங்களை புலிகள் கைப்பற்றி இருந்தார்கள். இவ்வாறு டெலோ அமைப்பிடம் இருந்து புலிகள் கைப்பற்றிய ஆயுதங்களின் தொகையையும் றோ அதிகாரிகளினால் சரியாக கணக்கிட முடியவில்லை.

இதனால்தான் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த போதிலும், புலிகளிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களின் விபரத்தை இந்தியப்படை அதிகாரிகளால் சரியாகக் கணிப்பிட முடியாமல் போயிருந்தது.

‘றோ அதிகாரிகள் புலிகளிடம் இருப்பதாக வெளியிட்ட ஆயுதங்களின் தொகையுடன் ஒப்பிடும்போது, புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களின் தொகை ஓரளவிற்கு பொருந்தவே செய்தன.

புலிகள் கட்டம்கட்டமாக மேற்கொண்ட ஆயுத ஒப்படைப்புக்களின் பின்னர், புலிகளிடம் ஒரு சிறிய தொகை ஆயுதங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக இந்தியப்படை அதிகாரிகள் கணித்திருந்தார்கள்.

பதுக்கப்பட்ட ஆயுதங்கள்?

1987ம் ஆண்டு செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் இந்தியப்படைகளின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினட் ஜெணரல் திபீந்தர் சிங்கிற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய அறிக்கை ஒன்று கிடைத்தது.

அந்த அறிக்கையில், யாழ் குடாவில் திடீரென்று பெரும் எண்ணிக்கையிலான ஷபொலித்தீன்| பைகளும், பெருமளவிலான ஷகிறீஸ்| உம் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியப்படையினருக்கு சிக்கலை ஏற்படுத்திய ஆயுதக் களைவு | Ltte Disarmament Caused The Problem

 

விடுதலைப் புலிகள் தங்களிடம் உள்ள பெருமளவிலான ஆயுதங்களை நிலத்தின் அடியில் புதைத்து வைப்பதற்காகவே, கிறீஸ் மற்றும் ஷபொலித்தீன்களை பெருமளவு கொள்வனவு செய்து வருவதாக புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்ட அந்த அறிக்கையில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் பற்றி, புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான அடுத்த சந்திப்பின்போது திபீந்தர் சிங் தமது சந்தேகத்தை தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த பிரபாகரன், புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்தில் தமிழ் ஈழத்தில் இயங்கிவரும் மாற்றுக் குழுக்களின் கைங்காரியம் என்று அதனைக் குறிப்பிட்டார்.

ஆயுத இறக்குமதி

அடுத்த வாரமும் அந்த இந்தியப்படை உயரதிகாரிக்கு மற்றொரு புலனாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றது. புலிகள் சிங்கப்பூரில் இருந்து பெருமளவு ஆயுதங்களை கொள்வனவு செய்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

700 துப்பாக்கிகளும், பெருமளவு வெடி பொருட்களும் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்டு, ‘இல்லனா என்ற கப்பல் மூலம் இந்து சமுத்திரத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிய சிறிய படகுகள் மூலம் தரையிறக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்தியப்படையினருக்கு சிக்கலை ஏற்படுத்திய ஆயுதக் களைவு | Ltte Disarmament Caused The Problem

இந்திய கடற்படை அந்த கப்பலை கண்டதாகவும், சர்வதேச கடற்பரப்பில் தரித்து நின்ற அந்தக் கப்பலை எதுவும் செய்யமுடியாது போய்விட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் பற்றி புலிகள் தரப்பினரிடம் இந்தியப்படை அதிகாரிகள் விசாரித்த போதும், அந்தக் குற்றச்சாட்டை புலிகள் மறுத்துவிட்டார்கள். ஆயினும், புலிகளின் ஆயுதக் கொள்வனவு பற்றிய தகவல்களுடன், பொலித்தின் மற்றும் ‘கிறீஸ் விற்பனை பற்றிக் கசிந்திருந்த தகவல்களையும் முடிச்சுப்போட்ட இந்தியப்படை அதிகாரிகள் ஒரு முடிவிற்கு வந்திருந்தார்கள்.

அத்தோடு இந்தியப்படை அதிகாரிகளுக்கு ஒரு விடயம் நன்றாகவே புரிந்தது புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதென்பது தாம் நினைத்தது போன்று அவ்வளவு இலேசான காரியமாக இருக்காது என்பதை இந்தியப்படை உயரதிகாரிகள் முதன்முதலாக உணர ஆரம்பித்தார்கள்.

Tags: #LTTE Leade#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindiasrilanka
Previous Post

காதலருக்காக நடிகை ராஷ்மிகா போட்ட பதிவு? வைரல்

Next Post

விண்வெளியில் காணாமற்போ தக்காளி ஓராண்டுக்கு பின்னர் கண்டுபிடிப்பு

Next Post
விண்வெளியில் காணாமற்போ தக்காளி ஓராண்டுக்கு பின்னர் கண்டுபிடிப்பு

விண்வெளியில் காணாமற்போ தக்காளி ஓராண்டுக்கு பின்னர் கண்டுபிடிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.