இதயம் மற்றும் மூளை வலிமை பெற மாதுளம் பழம் சாப்பிட்டால் போதும் என எம் முன்னோர்கள் கூறிவைத்துள்ளனர்.
தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்றும், உடல் மெலிந்தவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிடலாம்.
அதுமட்டுமல்லாது இதயம், மூளை வலிமை பெறும் என்றும், பித்தம் இருமல் ஆகியவற்றைப் போக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு .
அதோடு தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும், வயிற்றுக்கடுப்பு நீங்கவும் மாதுளம் பழத்தை சாப்பிடலாம்.
மாதுளம் பழத்தின் தோலை காய வைத்து பொடி செய்து பாசிப்பயறு மாவு சேர்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
மேலும் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து, நார்ச்சத்து ஆகியவை மாதுளம் பழத்தில் இருப்பதால் கருவற்ற பெண்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது.
Discussion about this post