இணைய நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீர்கொழும்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 31 சீன பிரஜைகளும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்று(29) பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 200-இற்கும் அதிக வௌிநாட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வௌிநாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.மோசடி செய்யப்பட்ட நிதியானது பிரித்தானியா, துபாய், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Discussion about this post