இணையம் மூலமான நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 சீனபிரஜைகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களுடன் கைது செய்யப்பட்ட பெருமளவிலான இலத்திரனியல் உபகரணங்களை ஆராய வேண்டியிருப்பதால், காவல்துறை கணினி குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் தமது விசாரணைகளை இன்னும் முடிக்கவில்லை.
குறித்த 25 சீன சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல களுத்துறை நீதிவான் உத்தரவிட்டதுடன் அடுத்தகட்ட விசாரணைகளை ஜூன் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்
இதற்கு புறம்பாக சட்டவிரோத சிகரெட்டுக்களை வைத்திருந்த சந்தேகநபர்களில் ஒருவர் 5 இலட்சம் ரூபாய் அபராதத்தை கடந்த புதன்கிழமை செலுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post