எக்ஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ட்விட்டர் செயலிக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் செயலி தற்போது இணையத்தில் அறிமுகமாகியுள்ளது.
த்ரெட்ஸ் பயனாளர்களிடமிருந்து எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் இவ்வாறு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, threads.net ஐ இனி யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்களும் , சமூக ஊடகவியலாளர்களும் த்ரெட்ஸ் செயலியை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் இப்புதிய வழிமுறை உதவும் என எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இன்ஸ்டாகிராம் செயலியின் தலைவரும் த்ரெட்ஸ் செயலியை கையாளுபவருமான அடம் மோஸேரி,
“இது நாள் வரையில் த்ரெட்ஸ் ஐபோன்களிலும் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளிலும் செயலி வடிவில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது.
எவ்வாறாயினும் தற்போது அது இணையத்துக்கு மாறியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அதன் அம்சங்கள் மேலும் மெருகேற்றப்படும்.
மேலும், அதன் பயன்பாடு எப்படி உள்ளது என்பதை தங்களிடம் தெரிவிக்கலாம்.” என தெரிவித்தார்.
Discussion about this post