இங்கிலாந்து கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டித் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவை தெரிவு செய்வதில் இங்கிலாந்து அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய ஒரு நாள் பயிற்சியாளர் அவுஸ்திரேலிய மேத்யூ மோட்டின் அடுத்த வாரம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையிலேயே இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது.
குமார் சங்கக்கார
எவ்வாறாயினும், சங்கக்காரவுக்கு மேலதிகமாக, முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் மைக்கேல் ஹசி மற்றும் ஆப்கானிஸ்தான் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜொனாதன் ட்ரொட் ஆகியோர் இங்கிலாந்து ஒருநாள் சர்வதேசப் போட்டி தலைமைப் பயிற்றுவிப்பாளர் பட்டியலில் உள்ளனர்
2021 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக சங்கக்காரா இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post