பெரும்பாலான ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் இன்று பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டன.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள வீடு, திஸ்ஸமஹாராமவில் உள்ள சமல் ராஜபக்ச ஆகியோரின் வீடுகளும் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
தங்காலையில் பொலிஸ் தடைகளை மீறி பிரதமரின் வீட்டை நோக்கி பொதுமக்கள் முன்னெறியதை அடுத்து நீர்த்தாரைப் பிரயோகமும், கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலும் பொலிஸாரால் நடத்தப்பட்டன. ஆயினும் பொதுமக்கள் கலைந்து செல்லாது அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமல் ராஜபக்சவின் வீட்டை நெருங்க முடியாதவாறு பொலிஸார் பாதுகாப்புத் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். ஆயினும் அங்கிருந்து நகராது மக்கள் கோசங்களை எழுப்பியவண்ணம் இருந்தனர்.
அதேநேரம், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் வீடுகள் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களான ரெமேஷ் பத்திரன, ஜனக்க பண்டார, காஞ்சனா விஜயசேகர, நிமல் லான்சோ, சசீந்திர ராஜபக்ச ஆகியோரின் வீடுகளும் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post