வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடரின்போது ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அவசர மற்றும் மருத்துவ தேவைகளைத் தவிர ஏனைய காரணங்களுக்காக வெளிநாடு செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இது தொடர்பான யோசனை பிரதமரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதீட்டு கூட்டத் தொடரின்போது வெளிநாடு செல்லக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. டிசெம்பர் 8 ஆம் திகதிவரை அது நடைபெறும்.
Discussion about this post