மாகாணங்களின் ஆளுநர்களை நீக்கிப் புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள தீர்மானத்தால் அரசியல் களத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கால அரசியல் நலன் கருதி ஆளுநர் நியமனத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.
அரசியலில் ஈடுபடாத, மரியாதைக்குரிய நபர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுவது மரபாக இருக்கும் நிலையில், தீவிர அரசியலில் ஈடுபட்டுவரும் சிலரை ஆளுநர் பதவிகளில் நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளமையே இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கால அரசியல் மற்றும் கட்சி நலன்களை முன்னிறுத்தி இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என்றும், இதனால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைப்பதால், ஆளுநர் நியமன விவகாரம் இழுபறியில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post