நிதியமைச்சு – ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவரும், 4 பெண்களும், 16 ஆண்களும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post