தேசிய மக்கள் சக்தியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (26) ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் ஈடுபடுவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையில் வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதன்படி, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் வளாகம் உள்ளிட்ட பல பெயரிடப்பட்ட இடங்களுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு மேற்படி பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Discussion about this post