ஆண், பெண் வேறுபாடுகளின்றி, நம் அனைவரின் வெளித்தோற்றத்திற்கு உச்ச செல்வாக்குச் செலுத்தும் காரணி, தலைமுடியாகும். ஒரு பெண்ணின் சிகை அலங்காரம் அவளது ஆளுமைக்கு ஒரு காரணியாகவும் அமைகின்றது. அதனால்தான் கூந்தல் பெண்கள் ஒரு அணியும் ஒரு ஆபரணமாகக் கருதப்படுகிறது. எந்தவொரு பெண்ணும் தன் அழகைப் பற்றி அக்கறை காட்டுவது போலவே, அவளுடைய கூந்தலை பராமரிப்பதிலும் சமஅளவான ஈடுபாட்டை கொண்டிருக்க வேண்டும். பெலும்பாலான பெண்கள் நீளமான கூந்தலைப் பெற முயற்சி செய்தாலும், கூந்தல் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதே மிக முக்கியமான அம்சமாகும்.
கூந்தல் பராமரிப்புக்கு, இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்துவது, பண்டைய காலம் முதல் இன்று வரை நம் நாட்டு மக்களால் நடைமுறையில் உள்ள ஒரு விடயமாகும். தலைமுறை தலைமுறையாக கூந்தல் பராமரிப்புக்காக சுதேச மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கான காரணம், அவற்றில் காணப்படும் மருத்துவ குணமும் அதன் மூலமான சிறந்த பிரதிபலனுமேயாகும். இவ்வாறு பயன்படுத்தப்படும் எள் எண்ணெய், சிவப்பு வெங்காயச் சாறு, மல்லிகைச் சாறு, தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை மூலப்பொருட்களால் கூந்தல் மற்றும் தலையின் மேற்பரப்புக்கு வழங்கப்படும் போசணையானது விலைமதிப்பற்றதாகும்.
எள் எண்ணெயின் பயன்பாடு மருத்துவ மதிப்பின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மருத்துவ எண்ணெய்கள் உற்பத்தியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தலை ஆரோக்கியமானதாக பராமரிக்க எள் எண்ணெய் உதவுகிறது. பண்டைய காலம் முதல் இன்று வரை எள் எண்ணெய், கற்றாழை, தேங்காய் எண்ணெய், வெந்தயம், கறிவேப்பிலை, ஆனைக்கொய்யா போன்றவற்றை கலந்து உச்சந்தலையில் பூச பயன்படுத்தப்படுகின்றது
எள் எண்ணெய் ஆனது, விற்றமின் E உள்ளிட்ட போசணைகளால் நிறைந்துள்ள எண்ணெய் என, ஆயுர்வேதம் கூறுகிறது. எள் எண்ணெயை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் தலைக்கு ஈரப்பதனும், உலர்ந்த கூந்தலை மென்மையாக தக்க வைத்துக் கொள்ளவும் முடிகின்றது. தினமும் இதைச் செய்துவருவதன் மூலம் நீங்கள் பளபளப்பான கூந்தலை பெற முடியும். உச்சந்தலையில் எள் எண்ணெயை அடிக்கடி தடவுவதன் மூலம், தலைக்கு கிடைக்கும் போசணை காரணமாக, தலைவலி, முடி நரைத்தல், கூந்தல் உதிர்தல் போன்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடிவதுடன் கூந்தல் வளர்ச்சியையும் அது ஊக்குவிக்கிறது. எள் எண்ணெய், தலைக்கு குளிர்ச்சியை வழங்குவதோடு, வெயில் காரணமாக கூந்தலுக்கு ஏற்படும் சேதத்தையும் குறைக்கிறது. தலையின் தோல் வரட்சி காரணமாக ஏற்படும் அரிப்பை குறைக்கும் எள் எண்ணெயானது, தலைவலியை தவிர்ப்பதற்காக தொன்றுதொடடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிவப்பு வெங்காயத்தை நன்றாக அரைத்து பெறப்படும் சாற்றை உச்சந்தலையில் தடவுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் பண்டைய காலத்திலிருந்த மக்கள் நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். பெண்கள் இன்றும் சிவப்பு வெங்காயச் சாற்றை எடுத்து உச்சந்தலையில் தடவுகிறார்கள். ஏனெனில் அது மயிர்க்கால்களுக்கு போசணையை வழங்குவதன் மூலம், கூந்தல் வளர்ச்சிக்கு அவசியமான போஷாக்கை வழங்கி, இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகின்றது. உலர்ந்த மற்றும் சேதமடைந்த கூந்தலுக்கு நிவாரணமளிக்கவும் கூந்தல் நுனி பிளவடைவதை குறைக்கவும் உதவுகின்ற சிவப்பு வெங்காயச் சாற்றை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான கூந்தலைப் பெற முடியும்.
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன ரீதியான நோய்களைப் போக்குவதற்கான நறுமணம் கொண்ட மருந்தாக பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஜெஸ்மின்’ என அழைக்கப்படும் மல்லிகைச் சாறு, உள்ளூர் ஆயுர்வேதத்தின் மூலப்பொருளாகவும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பெறுமதிமிக்க மூலப்பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மல்லிகை மலர்ச் சாற்றில் உள்ள கூறுகள், கூந்தல் உதிர்தலைக் குறைக்கின்றன. இயற்கையாக ஈரலிப்பை வழங்கும் மல்லிகைச் சாறு, தலையின் தோல் உலர்வடைவதைத் தடுத்து, பொடுகு ஏற்படுவதை குறைக்கவும் உதவுகிறது. மல்லிகையின் சாரத்தின் தனித்துவமான நறுமணம் மனதை அமைதியாக பேண எவ்வாறு உதவுகின்றது என்பது உண்மையிலேயே ஆச்சரியமளிக்கும் விடயமாக காணப்படுகிறது.
இலங்கைப் பெண்கள் தங்களது கூந்தலின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் விடயங்களில் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு மிக பிரதான இடத்தை வகிக்கின்றது. பெரும்பாலான பெண்கள் தங்களது வீட்டில் தயாரிக்கும் தேங்காய் எண்ணெயுடன், இயற்கையான தாவரச் சாறுகள் மற்றும் இயற்கை மூலப்பொருட்களை சேர்த்து தங்கள் கூந்தலில் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான மூலப்பொருட்களானவை, இலங்கையின் ஆயுர்வேத பாரம்பரியமாக கருதப்படும் உள்ளூர் இயற்கை மூலப்பொருட்களாக காணப்படுகின்றன. மல்லிகை மலர்ச் சாறு மற்றும் எள் எண்ணெயுடன் கலந்த தேங்காய் எண்ணெயை தலைக்கு பயன்படுத்துவது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். ஆயினும், கூந்தலுக்கான அனைத்து தேங்காய் எண்ணெய்களையும் இவ்வாறு ஒரே மாதிரியானதாக கருதி பயன்படுத்த முடியாது என்பதால், இது வேலைப்பளு மிக்க பெண்களுக்கும் ஆண்களுக்கும் இயற்கையாக உள்ள பயன்பாட்டில் சிக்கலை ஏற்படுத்துகிறது. அத்துடன் அவை கொண்டுள்ள மணம் மற்றும் ஒட்டும் தன்மை காரணமாக விரும்பத்தகாத வகையிலும் அமைந்து விடுகிறது. இதன் விளைவாக, வீட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்களைப் பயன்படுத்துவதானது, பணிக்குச் செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு தொந்தரவான விடயமாக அமைகின்றது.
அறிமுகப்படுத்தப்படும் ‘குமாரிகா நரிஷிங் ஹெயார் ஒயில் – ஹெயார் தினிங் கண்ட்ரோல்’ – வழமையான கூந்தல் எண்ணெய்களைப் போலல்லாமல், இது கூந்தலுக்குத் தேவையான போஷாக்கை அளிப்பதுடன், கூந்தல் மெலிதாகும் பிரச்சினைக்குத் தீர்வையும் வழங்குகிறது. வீட்டிலேயே கூந்தலைப் பராமரிக்கும் ஆண்களும் பெண்களுமாகிய உங்களுக்கு, ‘குமாரிகா ஹெயார் தினிங் கண்ட்ரோல்’ மூலம் கிடைக்கும் புதிய வாசனை மற்றும் போஷாக்கு காரணமாக, நெகிழ்வானதும், ஸ்டைலானதுமான கூந்தலைப் பெறலாம். தொழில் துறையில் ஈடுபடும் நீங்கள், பணிபுரியும் சூழலில் கூட எவ்வித சந்தேகமுமின்றி பயன்படுத்தக்கூடிய வகையில் இது உற்பத்தி செய்யப்பட்டுள்ளமையானது, மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இலங்கையர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகைச் சாறுகள், எள் எண்ணெய், மல்லிகைச் சாறு, சிவப்பு வெங்காயச் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய 4 மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும், ‘குமாரிகா ஹெயார் தினிங் கண்ட்ரோல்’ ஆனது, முடியின் உள்ளேயும், தலையின் மேற்பரப்பிலுள்ள தோலுக்கும் போஷணையை வழங்குவதன் மூலம், கூந்தலில் காணப்படும் பிரச்சினை கொண்ட தன்மைகளை நீக்கி, பளபளப்பான, கீழ்ப்படியும் கூந்தலை பெற வழிவகுக்கின்றது.
‘குமாரிகா ஹெயார் தினிங் கண்ட்ரோல்’ எண்ணெயானது, உங்கள் பரபரப்பான வாழ்க்கை முறைக்கேற்ப எளிதாகவும் குறைந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘குமாரிகா ஹெயார் தினிங் கண்ட்ரோல்’ எண்ணெய் மூலம், ஆரோக்கியமானதும் பளபளப்பானதும் கீழ்ப்படிதலும் கொண்ட கூந்தலை நீங்கள் தனதாக்கிக் கொள்ள முடியும் என்பதுடன், அதன் இனிமையான நறுமணம், நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடனும் புதிதாகவும் வைத்திருக்க உதவும்.
Discussion about this post