சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் இல்லத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று மாலை நேரில் சென்றார்.
பண்டாரகம, அட்டுளுகமவில் அமைந்துள்ள ஆயிஷாவின் வீட்டுக்கு சென்ற அவர் ஆயிஷாவின் தாயார் மும்தாஸ் பேகத்துக்கு நிதியுதவியும் வழங்கி குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
அங்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, போதைப்பொருள் அச்சுறுத்தலால் பூக்கொத்தைப் போல மேலும் ஒரு சிறுமி துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்டார் என்றும், இந்தப் பேரழிவு ஒழியும் வரை இதுபோன்ற அவலங்கள் ஓயாது என்றும் தெரிவித்தார்.
Discussion about this post