இலங்கை கால்பந்து அணி வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல் இன்று திங்கட்கிழமை மாலை மன்னார் பொது சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது.
இலங்கை கால்பந்தாட்ட அணியில் விளையாடும், டக்சன் பியூஸ்லஸ், மாலைதீவில் கழகமொன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் விளையாடி வந்தநிலையில் கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
மன்னார் பனங்கட்டுகொட்டு கிராமத்தைச் சேர்ந்த பியூஸ்லஸ், பருத்தித்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர்.
இவரது உடல், கடந்த் 3ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, அன்று குடும்பத்தவர்களிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் அவரது இலலத்தில் நடைபெற்று, பின்னர் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கல் திருப்பதி ஒப்புக்கொடுப்பட்டது.
பிற்பகல் 5 மணியளவில் மன்னார் பொது சேமக்காலையில் எடுத்துச் செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அதேவேளை, இன்று திங்கட்கிழமை மன்னார் பசார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு துக்கநாள் கடைப்பிடிக்கப்பட்டது.





Discussion about this post