ஆப்ரிகாட் என்று சொல்லகூடிய பழம் பாதாமி அல்லது வாதுமை பழம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை அதிகரிக்காது.
ஆப்ரிகாட் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்கி, உடல் எடையை சரியாக பராமரிக்க உதவுகிறது.
தினமும் காலையில் உடலில் உள்ள கழிவுகளை மலமாக வெளியேற்றினால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆப்ரிகாட் பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.
பாதாமி பழங்களில் வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை கூர்மையான பார்வைக்கு உதவுகிறது.
கொழுப்பு அதிகரிப்பு இதய நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பாதாமி பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை பாதுகாக்கும்.
Discussion about this post