ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டிருக்கிறார்கள்.
யாரையும் கொல்ல மாட்டோம், தாக்க மாட்டோம், யாருடைய உரிமையையும் பறிக்க மாட்டோம் – ஆனால், இஸ்லாமிய முறையிலான ஆட்சியை வழங்குவோம் என்று தாலிபன்களின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், பாரம்பரிய முறையிலான ஆட்சி என்பது பெண்களுக்கு கல்வி மறுப்பது, நவீன ஆடைகளை தவிர்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் சார்ந்தது. இந்த இருபத்து இரண்டு ஆண்டுகளில் தாலிபன்கள் இல்லாத ஆளுகை, 20 வயதில் இருக்கக் கூடிய ஆப்கானிஸ்தானின் இளம் தலைமுறையினருக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கும்.
இப்போது தாலிபன்களின் ஆளுகை மீண்டும் திரும்பவிருப்பதால், அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் அந்த இளம் தலைமுறையின் பெற்றோர், உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக காபூல் நகர வீதிகளில் ஆயுதங்களுடன் நடமாடும் தாலிபன்கள், வீடுகளில் சோதனை செய்து பொதுமக்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அடுத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியாமல் வாழ அச்சம் கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் பல மைல்கள் தூரத்தில் உள்ள விமான நிலையதுத்துக்கு நடந்தே வந்துள்ளனர்
Discussion about this post