நான்காவது காலாண்டில் ஆடைகள் மற்றும் தொழில் துறை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என்று சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியே இதற்கு பிரதான காரணம் என அந்த சம்மேளனத்தின் பொது செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுதந்திர வர்த்தக வலயத்தில் அமையப் பெறாத சிறிய மற்றும் நடுத்தர ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்றுரை ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளன.
இதற்கமைய 15 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்றும், சில நிறுவனங்கள் உற்பத்தியை கைவிட்டுள்ளன என்றும் சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் சம்மேளனத்தின் பொது செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Discussion about this post