Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆன்மீகமும் ஜோதிடமும்

ஆடிஅமாவாசை 2021: முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீர்கள்!

August 6, 2021
in ஆன்மீகமும் ஜோதிடமும், முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஆடி அமாவாசை வரும் 8ஆம் திகதி இலங்கை, இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஞாயிற்றுக்கிழமையும் கனடாவில் 7 ஆம் திகதி சனிக்கிழமையும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்த நாளாகும். அமாவாசை திதி சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு முடிவடைகிறது. சனி மற்றும் ஞாயிறு தினங்கள் பித்ருக்களை வணங்குவதற்கு சிறப்பு வாய்ந்த தினங்களாக கருதப்படுகின்றது. எனவே இந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசை பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெறுவதற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும்.

பொதுவாகவே அமாவாசை திதி தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து தானம் கொடுப்பார்கள். காக்கைக்கு உணவு கொடுப்பார்கள். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்கள்தான் சிறப்பானது என்று புனித தீர்த்தங்களில் நீராடி படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

இலங்கையில் கீரிமலை நகுலேஸ்வரத்திலும் புத்தளத்தில் முன்னேஸ்வரத்திலும் மட்டக்களப்பில் மாமாங்கத்திலும் பிதிர்க்கடன் செலுத்துவது மிகவும் சிறப்பானதாகும். இந்நாளில் இறந்த ஆத்மாக்களுக்கு பிதிர்க்கடன் செலுத்துவது ஆயினும் ஆடிஅமாவாசை தந்தைக்கு பிதிர்க்கடன் செலுத்தும் சிறப்பு நாளாகும்.

இவ்வருடம் ஆடி அமாவாசை நாளில் நாம் புனித நீர் நிலைகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதால் வீட்டிலேயே முன்னோர்களுக்கு படையல் போட்டு வணங்கலாம். அவர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

எள் கலந்த தண்ணீர்:

நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். தர்ப்பணம் செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்பட்டு அது பித்ரு தோஷமாக மாறி சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது. ஆகவே தவறாது அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தடைகள் ஏற்படும்:

புனிதமான தர்ப்பணங்களை செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம்.

நோய் பாதிப்புகள்:

இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

திதி கொடுக்கலாம்:

அமாவாசை நாளில் இறந்த முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணமும், அவர்களை நினைத்து செய்யும் நல்ல காரியங்களாலும் பலன்கள் அதிகரிக்கும். முன்னோர்களின் ஆசியால் இதுநாள்வரை தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென நடைபெறும். நாம் கொடுக்கும் தர்ப்பணத்தில் மகிழ்ச்சியடையும் முன்னோர்கள் நம்மை ஆசிர்வாதிப்பார்கள். இதனால் தரித்திரம் விலகும் ஐஸ்வர்யம் பெருகும்.

அன்னதானம் கொடுங்கள்:

சனிக்கிழமை தினத்திலும் ஞாயிறுக்கிழமை தினத்திலும் அமாவாசை வருவது விஷேசமானது. அன்றைய தினம் சனிபகவானையும் வழிபடலாம். தந்தைக்காரகர் சூரியனையும் வழிபடலாம். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலிட்டு இயலாதவர்களுக்கு தானம் கொடுக்கலாம். ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மறக்காமல் வரும் 8ஆம் தேதி மறக்காமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டார் நம்முடைய முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

Previous Post

அனைத்து ஊழியர்களையும் பணிக்கு அழைத்தமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்.

Next Post

அன்னதானக்கந்தன் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த திவ்ய மஹோற்சவம் 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை

Next Post

அன்னதானக்கந்தன் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த திவ்ய மஹோற்சவம் 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.