Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஆசிரியர் தினத்துக்கு பணம் செலுத்தாமையால் மாணவி மீது அதிபர் தாக்குதல்

September 29, 2022
in இலங்கை
ஆசிரியர் தினத்துக்கு பணம் செலுத்தாமையால் மாணவி மீது அதிபர் தாக்குதல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி சாவித்ரி சர்மா தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபாய் செலுத்தவில்லை என தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து “சேர் எனது சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் தனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிடமிருந்து பணத்தை வாங்கித் தருவதாக” குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை செய்துகொண்டிருந்த மாணவியின் தந்தை, மகளின் அலறல் கேட்டு, பாடசாலைக்கு ஓடி மாணவியைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவியுடன் தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்த தந்தை பொருளாதார பிரச்சினையில் தான் இருப்பதுடன், தனது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், தனது மகள் தாக்கப்பட்டமை தொடர்பில் திம்புள்ளை பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடையும் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, ஒழுக்கம் விடயமாகவே குறித்த மாணவியை சிறு தடியொன்றினால் தாக்கியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

Previous Post

இலங்கைக்கு நிதியுதவி அளிக்க முன்வந்த ஐரோப்பிய ஒன்றியம்

Next Post

காதலியின் புதிய காதலனை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்ல முயன்ற இளைஞர்!!

Next Post
காதலியின் புதிய காதலனை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்ல முயன்ற இளைஞர்!!

காதலியின் புதிய காதலனை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்ல முயன்ற இளைஞர்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.