ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஏதேனும் காரணங்களுக்காக எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காமல் இருக்குமாயின், பாடசாலை மாணவர்கள் கல்வியை இழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்கள் இவ்வாறான நிலைமைக்கு முகங்கொடுக்க நேரும் பட்சத்தில், ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி – அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரத்தன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி இன்று இதனை குறிப்பிட்டார்.
Discussion about this post