ஆசிரியர்கள்- அதிபர்கள் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற
கலந்துரையாடல் சாதகமானதாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின்
பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்ட பின்னர் குறித்த
தொழிற்சங்கத்துடன் முதன்முறையாக கலந்துரையாடல் நேற்று (26) இடம்பெற்றது.
இதன்போது, ஆசிரியர்கள் – அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவை
இணைக்குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளுடன் ஆசிரியர் சங்கத்தின்
பரிந்துரைகளையும் இணைத்து எதிர்வரும் திங்கட் கிழமை அமைச்சரவையில்
சமர்ப்பிக்குமாறு தொழிற்சங்கம் அமைச்சரிடம் கோரியுள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை
ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை
தெரிவித்தார்.
Discussion about this post