அதிபர்´ – ´ஆசிரியர்களின்´ சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கான
சிபாரிசுகளை முன்வைக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்
நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு நேற்று கொழும்பில் கூடியது.
´சுபீட்சத்தின் தொலைநோக்குக்´ கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, ஆசிரியர்
மற்றும் அதிபர் சேவையை அரச சேவையில் கௌரவமான தொழில்துறையாக கருதும்
வகையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் தொழிற்சங்கங்களை சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
Discussion about this post