சம்பள முரண்பாடுகளுக்கான அரசாங்கத்தின் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளவும்,
அக்டோபர் 21 ஆம் திகதி முதல் கடமைக்கு அறிக்கை அளிக்கவும், தற்போது
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்
சங்கங்களுக்கு இலங்கை பொதுஜன பெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை
கருத்திற்க் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அனைவரும்
எதிர்பார்க்கிறார்கள் என இலங்கை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற
உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான ஜி .எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இதை ஒரு புதிய தொடக்கமாக கருதி கல்வி
முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என அவர் மேலும்
கேட்டுக்கொண்டார்.
Discussion about this post