எந்தவொரு காரணத்துக்காகவும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் உடையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று அறிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் உடையை மாற்றி பாடசாலைக்கு வருவதற்கு வசதியான ஆடையை அணிய இடமளிக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் ஆசிரியர்களுக்கு இலகு ஆடைகளை அனுமதிப்பது கலாசார சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்றும், அதை ஒருபோதும் அனுமதிக்கூடாது எனவும் மகாசங்கத்தினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆசிரியர்களுக்கான ஆடை சுதந்திரத்தால் கலாசாரம் சீர்கெடாது என் வலியுறுத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இந்த விடயத்தில் கல்வியமைச்சர் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் கல்வி அமைச்சர் மேற்கண்ட அறிப்பை விடுத்துள்ளார்.
Discussion about this post