நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனடியாக நகருமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாத்திரம் எடுத்துக் கொண்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவசர நிலைமைகளின் போது அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவசர தொலைபேசி இலக்கம் :- 117
இடர் முகாமைத்துவ நிலையம் :- 0112136222 / 0112670002 / 0112136136
பொலிஸ் :- 0112421111
Discussion about this post