இலங்கை அரசு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது போல் உள்ளதால், பிழைக்குமா பிழைக்காதா என்பதை தற்போதைக்கு சொல்ல இயலாது என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் மோசமான நிலையில் உள்ளனர். எரிவாயு, மின்சாரம் என எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழக ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார நெருக்கடி காரணம் அங்கு நடந்த மிகப்பெரிய ஊழல் தான் என்று தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே சீனா இலங்கையில் பல்வேறு இடங்களை கைப்பற்றியுள்ளது. இன்னும் இடங்களை கைப்பற்ற உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
வாங்கிய கடன் செலுத்துவதற்காக மற்று ஒரு கடன். இதுவும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று குறிப்பிட்ட சிவாஜிலிங்கம், கோத்தாபய ராஜபக்ச இலங்கையில் அனைத்தையும் இராணுவ மயமாக்கி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் இது எல்லாம் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post