இலங்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் எதிர்வரும் திங்கட்கிழமை நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதேவேளை, அவசரகால நிலைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
Discussion about this post