அவசரகால சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கின்றது என்று அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கக்கூடாது. அவ்வாறு ஒடுக்க முற்பட்டதால்தான் இந்நாட்டில் ஆயுதப்போராட்டம்கூட ஏற்பட்டது. அந்தவகையில் அவசரகால சட்டத்தை கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சோரம் போய்விட்டதென சில புல்லுருவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். கூட்டமைப்பு ஒருபோதும் சோரம் போகாது. முலுகெலும்புடன் செயற்படுவோம் எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.
Discussion about this post