அவசர காலச் சட்டத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என்று முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவத்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இன்று மாலை நடந்த சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அமைச்சுப் பதவிகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவர் என்று அறிவித்திருந்தார்.
அதன்பின்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், சுதந்திரக் கட்சியினருக்கும் இடையே சந்திப்பொன்று நடைபெற்றது.
Discussion about this post