தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தின் பின்னர் தமிழ் தேசியம் என்பது முற்றுமுழுதாக மறைந்து விட்டது என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்தார்.
தொலைக்காட்சி அரசியல் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்களே கட்சி தொடர்பில் கடும் விமர்சனங்களையும், தலைமைத்துவம் தொடர்பில் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர் என்று தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ பிரச்சினைக்கு முற்றுமுழுதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
2009 ஆம் ஆண்டு கட்சி இருந்த நிலைமைக்கும் தற்போது கட்சியின் நிலைமையை ஒப்பிடும்போது கடும் வீழ்ச்சியும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளதை உணர முடியும் என்று தெரிவித்துள்ள அவர், இருண்ட யுகத்தை நோக்கி கட்சி பயணித்துக் கொண்டிருக்கின்றது என்றும் தெ ரிவித்தார்.
இந்த நிலைமை தொடருமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த இடம் தெரியாது அழிந்து போகும் நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post