அழகாக இருக்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அந்த வகையில் க்ரீன் டீ என்பது உடலுக்கு மட்டுமல்லாது சருமத்துக்கும் மிகுந்த உபயோகமாக இருக்கின்றது.
க்ரீன் டீயில் ஆன்டி – ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்ச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் தோல் பராமரிப்புக்கும் இது பயன்படுகிறது.
சரி இனி க்ரீன் டீயானது சரும பராமரிப்புக்க எந்தவகையில் உதவுகின்றது எனப் பார்ப்போம்.
சூடான நீரில் க்ரீன் டீ தேயிலையை ஊறவைத்து பின்னர் ஆவி பிடித்தால் முகத்திலுள்ள பருக்கள் நீங்கிவிடும்.
தேன், சீனியுடன் க்ரீன் டீயை சேர்த்து முகத்தில் பூசி ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவாகும்.
தொடர்ந்து எட்டு வாரங்கள் க்ரீன் டீயை சருமத்துக்கு அப்ளை செய்வதன் மூலம் முகத்திலுள்ள எண்ணெய் பசை குறைவடைகிறது.
க்ரீன் டீயுடன் கடலை மா, தயிர் சேர்த்து முகத்தில் பூசி காய்ந்ததும் நீரில் கழுவ வேண்டும். இது முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.
க்ரீன் டீ பேக்கை சருமத்துக்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் க்ரீன் டீயானது சருமத்தை இறுகச் செய்கிறது. சருமத்துளைகளை அடைக்கிறது.
க்ரீன் டீ தயாரித்து, அந்தக் கலவையை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கட்டியானதும் முகத்தில் பூசி வரவேண்டும்.
க்ரீன் டீ பையை நீரில் ஊறவைத்து எடுத்து, பின்னர் அதனை கண்களுக்கு மேல் வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்கள் போவதுடன் கண்களுக்கு கீழ் உள்ள வீக்கங்கள் குறைவடைந்து சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.
Discussion about this post