நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக அகற்ற வேண்டும் என
ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார
தேரர் கூறியுள்ளார்.
அத்தோடு, அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான்
செய்த குற்றங்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ள இயலாது என்றும் அவர்
சுட்டிகாட்டினார்.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து
பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட
ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில்
அதற்குப் பதில் தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
Discussion about this post