முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை(10) அலரி மாளிகையிலிருந்து பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் வெளியேறினார்.
பிரதமர் மஹிந்த பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அலரி மாளிகையிலிருந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அலரிமாளிகையைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்ரோசமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அவரைப் பாதுகாப்பாக வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
எவ்வாறாயினும் இன்று அதிகாலை அவர் அங்கிருந்து வெளியேறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post