அமெரிக்காவில் அரிய வகை அமீபா நோய்க்கு சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அமெரிக்காவில் மூளையை திண்ணும் அரிய வகை நோயான அமீபா நோய் பரவி வரும் நிலையில் நெல்லேரியா பவுலேரி என்ற தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது.
இந்த நோய் நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகனை நேரடியாக தாக்கும் என கூறப்படுகின்றது. இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஏரி, குளம், போன்றவற்றில் வாழும் அமீபா அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போது மூக்கு வழியாக அமீபா உடலுக்குள் சென்று விடும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, தூக்க மின்மை, கடுமையான தலைவலி, சுவையில் மாற்றம், கழுத்து வலி, மாறுபட்ட மனநிலை போன்றவை ஏற்படும்.
இந்த நிலையில் அமீபா நோயால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட நிவேடா என்ற பகுதியை சேர்ந்த உட்ரோ டர்னர் என்ற 2 வயது சிறுவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தான். இந்த தகவலை அவனது தாய் பிரியனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பகிந்துள்ளார்.
கடந்த 7 நாட்களாக அமீபா நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், தனது மகன் தான் எனக்கு ஹீரோ என்றும் உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post