எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அரிசி, பருப்பு, சீனி உட்பட அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கலாம் என்று அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி பண மிதப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் என்று அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
அமெரிக்க டொலரின் பெறுமதி மிதக்க விடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலைகளை எவ்வாறு தீர்மானிப்பது என்பது தொடர்பில் இன்னும் சரியான முடிவுக்கு வர முடியவில்லை என்று அவர் கூறனார்.
அடுத்த வாரத்தில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post