நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் சந்தையில் அரிசியின் விலை ஓரளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தொட்டை நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமாக பயிர் நிலங்களில் விளைந்த சிறுபோக பயிர்களை அறுவடை செய்யும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
வறட்சி காரணமாக ஒரு இலட்சம் ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ள போதிலும், எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது நெல் கையிருப்பு தனியார் வசம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
தனியார் துறையில் நெல் கிடைப்பதால் அரிசியின் விலை உயரும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுப்பதுடன் நுகர்வோரையும் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Discussion about this post