நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வொன்றை தேசிய கணக்காய்வு அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 3 வருட காலப்பகுதியில் பெறப்பட்ட அரச கடன்கள் தொடர்பில் இந்த விசேட கணக்காய்வில் கவனம் செலுத்தப்படவுள்ளது என்று கணக்காய்வாளர் நாயகம் சுலந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விசேட கணக்காய்வு அறிக்கையை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட விதம், நாட்டின் வருமானம் மற்றும் செலவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கணக்காய்வின் போது அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post