பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொதுத்துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியும் திட்டத்தை தயாரித்து வருகின்றது.
பொதுத்துறை ஊழியர்களின் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது என்று கூறினார்.
இது தொடர்பான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன என்றும், விரைவில் இது தொடர்பில் முழுமையான திட்டம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.
Discussion about this post