அரச ஊழியர்களுக்கான ஒக்ரோபர் மாதச் சம்பளத்தை வங்கியில் வைப்பிலிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
இலங்கையில் மாதாந்தம் 25ஆம் திகதி அரச ஊழியர்களுக்கு சம்பளம் வைப்பிலிடப்படும். எதிர்வரும் 24ஆம் திகதி அதாவது திங்கட்கிழமை தீபாவளி காரணமாக விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் 3 நாள்கள் தொடர்ச்சியாக விடுமுறை அமைந்துள்ளது.
இதனால் அன்று வேதனத்தை வங்கியில் வைப்பிலிட வேண்டியிருந்தது. ஆயினும் திறைசேரியிடமிருந்து அதற்குரிய பணம் கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
இதனால் அரச ஊழியர்களுக்கான சம்பளத் திகதி பின்தள்ளிச் செல்லும் ஏற்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post