நீதிபதிகள் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் அரச அதிகாரிகள் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சுச் செயலாளர்கள், மாகாணங்களில் உள்ள பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அடுத்தவாரம் இது தொடர்பான சுற்றறிக்கை வழங்கப்படவுள்ளது.
வழமையான விடயங்கள் தொடர்பாக அவர்கள் சட்டமா அதிபருடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும், எனினும் ஏனைய விடயங்கள் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாகவே தெரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதித்துறைச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் அரச அதிகாரிகள் , நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுடனான வழக்கமான தொடர்புகளை மேற்கொள்ள முடியாது என்றும் நீதித்துறை விவகாரங்களில் தேவைற்ற தலையீடுகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் அமைச்சின் செயலாளர் ஒருவர் பிரதம நீதியரசருக்கு நேரடியாகக் கடிதம் எழுதிய சம்பவமே,, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுக்க முக்கியமான காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post