அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்கின்றது என்று சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது தொடர்பாக கொழும்பில் கடந்த வாரம் 3 சந்திப்புக்கள் நடந்துள்ளன என்றும் அரச புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
எதிர்க்கட்சிகளிளின் பிரதான அரசியல் குழுக்களுடன் ஏற்கனவே இது தொடர்பாகப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும கூறப்படுகின்றது. சபாநாயகரிடம் எழுத்துமூலம் பெரும்பான்மையைக் காட்டி அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post